வேலூரில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்
ஊரடங்கு தளர்வு காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மண்டலத்தில் நகரப்பேருந்துகள் முழு அளவிலும், புறநகர் பேருந்துகளை தேவைக்கேற்ப இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் நடராஜன் தெரிவித்தார்.
ஏற்கனவே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உட்பட 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலத்தில் 620 பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகள் இயக்க ஆலோசனை நடந்து வருகிறது. வேலூர் மண்டலத்தில் இருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகளை இயக்குவதற்காக பஸ்களை முழுமையான அளவில் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது .
பேருந்துகளின் இன்ஜின், சக்கரங்கள், பிரேக் செயல்பாடு என முழுமையாக பரிசோதித்து கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படுகிறது. அதே போல் வேலூர் பழைய பஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று-வருகிறது .
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்க ழக வேலூர் மண்டல பொது மேலாளர் நடராஜனிடம் கேட்டபோது , ' வேலூர் மண்டலத்தில் 620 பேருந்துகள் உள்ளன . ஏசி மற்றும் வால்வோ பேருந்துகளை தவிர்த்து நகர பேருந்துகளை முழுமையாகவும் , புறநகர் பேருந்துகளை தேவைக்கேற்ப இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது . வேலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் ' என்றார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu