நகைக்கடை சுவரில் துளையிட்டு பல கோடி மதிப்பு நகைகள் கொள்ளை

நகைக்கடை சுவரில் துளையிட்டு பல கோடி மதிப்பு நகைகள் கொள்ளை
X

கொள்ளை சம்பவம் நடைபெற்ற நகைக்கடை 

வேலூரில் பிரபல நகைக்கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியிலிருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை உள்ளது. நேற்று இரவு,10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றனர். இரவில், காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். ஊழியர்கள் இன்று காலை வந்த போது, பின்பக்க சுவர் துளையிடப்பட்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, வேலூர் வடக்குப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த துளையை பார்வையிட்டதுடன், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்தனர்.

வேலூர் சரக டிஐஜி பாபு, மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணனும் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். மொத்தம் 35 கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்ப்ட்டுள்ளதாகவும், தங்க நகைகளை விட வைர நகைகளே அதிகம் கொள்ளை போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
ai and future of education