பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்
வேலூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை
வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைய நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில அளித்த 517வாக்குறுதிகளை அளித்தார் .ஆனால் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. அண்மையில் வழங்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஒன்று கூட தமிழக அரசு தரமான பொருட்கள் வழங்கவில்லை இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தின் 8 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எந்தவித திட்டமும் கொண்டு வரவில்லை. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதன் மூலம் தற்போது அரசு பள்ளியில் பயின்ற 517 மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பயின்று வருகின்றனர். வர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை கூட கட்டமுடியாத நிலையில் உள்ள பல மாணவர்கள் உள்ளனர். இவர்களெல்லாம் தற்போது மருத்துவ கல்வி பயில காரணமாக இருப்பது நீட்தேர்வு தான்.
நீட் தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவ மருத்துவக் கல்வி பயில பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. அவை எல்லாம் தற்போது களையப்பட்டு உள்ளது.
கொரானா தொற்று காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மக்களின் உயிர்களை காப்பாற்ற நாடு முழுவதும் 450 ரயில்கள் மூலம் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.
உலகம் முழுவதும் கொரான தொற்று அதிகரித்திருந்த நிலையில், இந்தியாவில் தான் முதன்முதலில் கொரானா தடுப்பூசி கொண்டுவரப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் 172 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
2024 ல் நாடாளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் ஒன்றாக வரும் என்று கூறுகிறார்கள், இது தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் அமையும்.
வேலூர் மாநகராட்சியில் 1234 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்ற 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஊழலின் காரணமாக திட்டம் நிறைவேற்ற இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது. இன்னும் கூட அந்த திட்டம் முடியவில்லை.
எனவே இது போன்ற ஊழல் இல்லாத ஆட்சி அமைய பாஜகவில் மட்டுமே தான் முடியும் .இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மக்களின் வாழ்க்கையும் மேம்படும். பிஜேபி கொள்கைகளிலிருந்து என்றும் மாறாது. மக்களுக்கு நல்லாட்சி தருவதே பிஜேபியின் கொள்கை.
திமுக மீது மக்களுடைய கோபம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டதால் நேரிடையாக பிரச்சாரம் செய்யாமல் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்கிறார் என அண்ணாமலை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி மாவட்ட செயலாளர் தசரதன் மற்றும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu