வேலூரில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

வேலூரில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

வேலூரில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 21,956 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

தமிழகம் முழுவதும் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்தன.

தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் வாரந்தோறும் சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தும்படி அரசு அறிவுறுத்தியது.

அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்பட 505 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாமில், 2-வது தவணை கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியை அதிகமான நபர்கள் போட்டு கொண்டனர். பொன்னை, மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 21,956 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!