இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்தி 500 ரூபாய் பறிமுதல்.

இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்தி 500 ரூபாய் பறிமுதல்.
X
அணைகட்டு அருகே உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில்கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்தி 500 ரூபாய் பறிமுதல்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரதளம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெரியஎட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்தி 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு லட்சத்தி 500 ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், அணைகட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமனிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்