சரக்கு வேனில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

சரக்கு வேனில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட வேன்

வேலூர் அருகே வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர், டிரைவர் தப்பியோட்டம்

பெங்களுரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்குள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த வேனை நிறுத்த முயன்றபோது, வேன் டிரைவர் வேனை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் சோதனை செய்தபோது, வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது

வேனில் இருந்தவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 22), செட்டி பள்ளியை சேர்ந்த வேல்முருகன்(24) என தெரியவந்தது.

கைப்பற்றிய குட்காவின் மதிப்பு சுமார் 5 லட்சம் என்றும்,பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்