அணைக்கட்டு அருகே நள்ளிரவில் மூதாட்டி குடிசைக்கு தீ வைப்பு

அணைக்கட்டு அருகே நள்ளிரவில் மூதாட்டி குடிசைக்கு தீ வைப்பு
X

தீ வைத்ததில் இருந்து சேதமான குடிசை

அணைக்கட்டு அருகே மூதாட்டி குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தது

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த நேமந்தபுரம் அருகே உள்ள ஓட்டேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லியம்மாள் (70). இவர் ஓலைக்குடிசையில் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும் இடப்பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இது குறித்து புகாரின் பேரில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூதாட்டியின் குடிசைக்கு யாரோ மர்ம ஆசாமி தீ வைத்துள்ளார். தீ கொழுந்து விட்டு எரிந்த போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அல்லியம்மாள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் குடிசை முற்றிலும் எரிந்து பொருட்கள் அனைத்தும் சேதமானது .

இதுகுறித்து அல்லியம்மாள் அவரது உறவினர்களுடன் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரி, இடப் பிரச்னை காரணமாக தனது குடிசைக்கு தீவைத்து கொளுத்தியதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!