/* */

வேலூர் அருகே மலைக்கிராமத்தில் வீடுபுகுந்து பொருட்களை சேதப்படுத்திய போலீசார்

வேலூர் அருகே மலைக்கிராமத்தில் வீடுபுகுந்து பொருட்களை சேதப்படுத்திய போலீசார்மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்எல்ஏவிடம் புகார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

வேலூர் அருகே மலைக்கிராமத்தில் வீடுபுகுந்து பொருட்களை சேதப்படுத்திய போலீசார்
X

மலைவாழ் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர்  அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

வேலூர் அடுத்த ஊசூர் அருகே குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை ஆகிய 3 மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிப்பவர்களில் சிலர் சாராயம் காய்ச்சுவது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அரியூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் மலை பகுதிகளில் சோதனை நடத்தி சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர்.

கடந்த 9-ந் தேதி மலைக்கு சாராய ரெய்டுக்கு சென்ற அரியூர் போலீசார், சாராய வியாபாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம், நகைகளை எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வேலூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் குழுவாக குருமலைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை உடைத்து, தானியங்களை தரையில் கொட்டி சேதபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பீரோவை உடைத்துள்ளனர். வீட்டில் இருந்த ரமேஷ் (37) என்பவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இதை பார்த்த மலைவாழ் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சென்று அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.

அதற்கு அவர் இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 20 Jun 2021 1:52 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்