ஒடுகத்தூர்: உத்திரகாவேரி ஆற்றில் குளிக்க சென்ற 8ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

ஒடுகத்தூர்: உத்திரகாவேரி ஆற்றில் குளிக்க சென்ற 8ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
X
ஒடுகத்தூர்: உத்திரகாவேரி ஆற்றில் குளிக்க சென்ற 8ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. 3 மணி நேரம் போராடி உடல் மீட்பு.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த ஓராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சூர்யபிரகாஷ். இவரின் மகன் யுவராஜ்(14) ஒடுகத்தூர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றின் தடுப்பணையில் குளித்து கொண்டு இருந்த போது யுவராஜ் உட்பட 2 பேர் நீரின் உள்ளே சென்றதை பார்த்த மற்றொரு நண்பர் கூச்சலிட்டுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து ஒருவரை மட்டும் மீட்டுள்ளனர். யுவராஜை தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில் ஒடுகத்தூர் தீயணப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினரின் 7 பேர் கொண்ட குழுவினர். சுமார் 3 மணி நேரம் தேடி யுவராஜை சடலமாக மீட்டனர். இது குறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!