கிணற்றில் விழுந்த 11 காட்டுப்பன்றிகள், பத்திரமாக மீட்ட வனத்துறையினர்
கிணற்றில் தத்தளித்த காட்டுப்பன்றிகள்
அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதிகளை சுற்றி சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பறந்து விரிந்த காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளது.
இந்த காட்டில் புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல், காட்டெருமை, முள்ளம்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. விலங்குகள் அடிக்கடி உணவுகளை தேடி விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.
இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் வனவிலங்குகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் கூட்டமாக வந்து செல்கின்றன.
ஒடுகத்தூர் அடுத்த அத்தி குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
வழக்கம்போல ரமேஷ் காலை நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார் அப்போது கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் கேட்டகவே, அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பன்றி குட்டிகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
வனத்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றில் போராடிக் கொண்டிருந்த 11 காட்டு பன்றிகளை உயிருடன் மீட்டனர். வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அருகே இருந்த காப்பு காட்டில் பன்றிகளை பத்திரமாக விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu