அணைக்கட்டுஅருகே இருதரப்பினருக்கிடையே மோதல் 7 பேர் மீது வழக்கு

அணைக்கட்டுஅருகே  இருதரப்பினருக்கிடையே மோதல் 7 பேர் மீது வழக்கு
X
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நிலத்தில் பைப் புதைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

அணைக்கட்டு தாலுகா பெரிய ஊணை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கேசவன். இவரது நிலமும், அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் துரை என்பவரது நிலமும் அருகருகே உள்ளது. இந்த நிலத்தில் உள்ள வழி பிரச்னை தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கேசவன் கடந்த 18ம் தேதி நிலத்தின் நடுவே உள்ள வழியை தோண்டி அதில் தண்ணீர் செல்லும் பைப் லைன் புதைத்துள்ளார். இதைப்பார்த்த துரை பைப் லைன் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதில் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து இரு தரப்பினரும் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் விதமாக விசாரணை நடத்தி ஆர்டிஓவுக்கு மனு அனுப்பினர் .

இதையடுத்து கேசவன் அளித்த புகாரின்பேரில், துரை தரப்பினர் 4 பேர் மீதும் துரை அளித்த புகாரின் பேரில் கேசவன் தரப்பை சேர்ந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!