தங்கக்கோவில் நிறுவனர் சக்தியம்மா 46 வது ஜெயந்தி விழா

தங்கக்கோவில் நிறுவனர் சக்தியம்மா 46 வது ஜெயந்தி  விழா
X

தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா ஜெயந்தி விழா

சக்தியம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பெண்கள் பால் குடம், திருவிளக்கு எடுத்து ஊர்வலம் நடைபெற்றது

வேலூர்மாவட்டம்,அரியூர் தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெண்கள் கைகளில் திருவிளக்குகளை ஏந்தி உலகம் நலம் பெற வேண்டியும் இந்த கொடிய கொரோனா தொற்று அழியவும் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்கள் பின்னர் பல்வேறு ஆன்மீக இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் பின்பு தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விஜய் சம்பாலா மற்றும் ஆந்திரா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெத்தரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, கோவை ஆதினம், காமாட்சிபுரம் ஆதினம், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மற்றும் திரளான பொதுமக்கள் தங்ககோவில் நிறுவனரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்று வழிபட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture