ஆவணங்களின்றி எடுத்து சென்ற 100 கிராம் தங்கம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 100 கிராம் தங்கம் பறிமுதல்
X

வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர்-ஜமால்புரம் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த வேலூர் தொரப்பாடி ரஹீம்நகர் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் நரேஷ்(20) என்பவர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 100 கிராம் அளவு கொண்ட 6 தங்க வளையல்களை (சுமார் 12 சவரன்) பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 6 தங்க வளையல்கள் அணைகட்டு வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கோபியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு