ஆரவாரத்துடன் நடைபெற்ற எருதுவிடும் விழா

ஆரவாரத்துடன் நடைபெற்ற எருதுவிடும் விழா
X

வேலுார் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் ஆரவாரத்துடன் எருதுவிடும் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 82 கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் முதல் நாளான இன்று அணைகட்டில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை ஓடி கடக்கும் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் எருதுவிடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். மேலும் காவல்துறை பாதுகாப்பும், மாட்டு உரிமையாளர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!