வேலூர் மாவட்டத்தில் ஐம்பொன் அம்மன் சிலை மீட்பு:பொதுமக்களிடம் பரபரப்பு

வேலூர் மாவட்டத்தில் ஐம்பொன் அம்மன் சிலை மீட்பு:பொதுமக்களிடம் பரபரப்பு
X

வேலூர் மாவட்டத்தில்  மீட்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த 66 புதூர் பகுதியில் உள்ள ஏரிக்கு அருகே ஐம்பொன் சிலை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது

வேலூர் மாவட்டம்,ஐம்பொன் அம்மன் சிலை மீட்கப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த 66 புதூர் பகுதியில் உள்ள ஏரிக்கு அருகே ஐம்பொன் சிலை ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில்தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜசேகர் உட்படஅங்கு சென்ற காவல்துறையினர் இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன் அம்மன் சிலையை மீட்டனர். மேலும் இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது என்றும் இது கடத்திவரப்பட்டதா? இதை கடத்தியவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக ஏற்பட்டது..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!