வேலூர் மாவட்டத்தில் 91 பதட்டமான வாக்குசாவடிகள்: ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 91 பதட்டமான வாக்குசாவடிகள்: ஆட்சியர் தகவல்
X

வேலூரில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். 

வேலூர் மாவட்டத்தில் 91 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகள் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.

வேலூர் மாவட்டத்தில் 91 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகள் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.

வேலூரில் நேற்று தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,

வேலூர்மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 2 நகராட்சிகள் 4 பேரூராட்சிகள் உள்ளது இதில் மொத்தம் 180 வார்டுகள் மாநகராட்சி 60,குடியாத்தம்,36,பேர்ணாம்பட்டு 21 ,உள்ளிட்டவைகளும் உள்ளது. மொத்த வாக்காளர்கள் 5,93,064 வாக்காளர்கள் உள்ளனர் அனைத்தையும் சேர்த்து 646 பூத்கள் உள்ளது.

இதில் வாக்குபதிவில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி நடந்து வருகிறது. மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு வருவாய் அலுவலர் ஆகியோர்கள் முன்னிலையில் வாக்குபதிவு அலுவலர்கள் 2400 பேரும் இம்மையத்தில் 1434 பேருக்கு இங்கு தற்போது பயிற்சியளிக்கபடுகிறது.

பதட்டமான வாக்குசாவடிகள் 91 உள்ளது. அதனை இன்னும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .மறு ஆய்வு செய்து குறைக்க சொல்லியுள்ளோம். மாநகராட்சி பகுதிகளில் சில பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளது .

கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதல் காவல்துறை பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் பணம் பிடிபட்டால் அதனை திரும்ப அளிக்க சொல்லிவிட்டோம். இதுவரையில் பணம் பறிமுதல் செய்யபடவில்லை என ஆட்சியர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture