ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு: 8,272 பேர் எழுதினர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு: 8,272  பேர் எழுதினர்
X

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் 8,272 பேர் நீட்தேர்வு எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் 6 ஆயிரத்து 272 பேரும், திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் 4 மையங்களில் 2,400 பேரும் என மொத்தம் 8 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர் . நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆங்கிலம் , இந்திமொழி கேள்வித்தாள் கருப்பு வெள்ளை நிறத்திலும், தமிழ்மொழியில் நீட்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பச்சை நிறத்திலும் வழங்கப்பட்டது .

ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு எஸ்ஐ தலைமையில் பெண் காவலர்கள் உட்பட 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் தேர்வு மையத்தின் அருகே தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது . மேலும் தேர்வு மையத்திற்கு செல்ல சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!