வேலூரில் அரசு பள்ளியில் படித்த 617 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

வேலூரில் அரசு பள்ளியில் படித்த 617 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்
X
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 617 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19ம்தேதி வெளியானது. இதற்கிடையே நீட்தேர்வு வரும் செப்டம்பர் 12 ம்தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2020-202ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 617 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர் .

நீட் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு வேலூர் மாவட்ட சிஇஓ குணசேகரன் தலைமை யில் வேலூர் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!