வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் துவங்கும் வேட்பு மனு தாக்கலின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள், குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் 57 கவுன்சிலர்கள், பென்னாத்தூர், திருவலம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா ஆகிய பேரூராட்சிகளில் 63 கவுன்சிலர்கள் என்று மொத்தம் 180 வார்டு கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் இன்றுவேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேலூர் மாநகராட்சி பகுதியில் காணப்பட்ட அரசியல் கட்சியின் கொடி, அரசியல் கட்சி பிரமுகர்களின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் மற்றும் பேனர் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 18004254464 தொடர்பு கொள்ளலாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உட்பட 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 1,99,208 ஆண் வாக்காளர்களும் 2,15,001 பெண் வாக்காளர்களும், 46 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4,14,255 வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 5,94,595 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வேட்புமனு தாக்கலின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu