10 முறைக்கு மேல் அழைப்பாணை அனுப்பியும் ஏன் ஆஜராகவில்லை: வேலூரில் ஸ்டாலின்
வேலூர்மாவட்டம், வேலூர் அண்ணாசாலையில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சிலை திறப்பு விழா வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவருமான ஸ்டாலின், திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் திரு உருவ சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவருமான ஸ்டாலின் பேசுகையில், காலில் ஊர்ந்து சென்று எடப்பாடி முதல்வரானார் நான் அதற்கு மேல் சொல்லவில்லை. அவருக்கு கோபம் வரும் முதல்வர் என்ன சொல்கிறார் என்றால் கலைஞர் எம்ஜிஆரால் முதல்வாரானார் என்பது வேடிக்கை. அப்போது எம்.ஜி.ஆர் திமுக பொருளாளராக இருந்தார் அது தான் உண்மை. ஆனால் பழனிசாமி முதல்வரானது நாட்டிற்கே தெரியும் நான் முதல்வரை பார்த்துகேட்கிறேன். நீங்கள் ஊர்ந்து வந்தது உண்டா? இல்லையா? அம்மையார் ஜெயலலிதா இறந்த பின்பு ஒ.பி.எஸ் முதல்வராகி சசிகலா முதல்வராக அறிவிக்கப்பட்டு அவர் சிறை சென்ற பின்னர் எடப்பாடி முதல்வரானார். ஒ.பி.எஸ் கட்சியை உடைக்க முயன்றார். ஜெயலலிதா சமாதியில் ஆவியுடன் பேசினார். நான் வேதனையில் சிக்கி தவிக்கிறேன் நீங்கள் இருக்கும் போது நான் முதல்வராக இருந்தேன் என ஜெயலலிதா சமாதியில் நியாயம் கேட்டார். பின்னர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமிஷன் வேண்டுமென கேட்டது துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம். முதல்வர்கள் எல்லாம் மறைந்த போது உடல் நலம் குறித்த தகவல்களும் மறைவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு ஒ.பன்னீர் செல்வத்துக்கு 10 முறைக்கு மேல் விசாரிக்க அழைப்பாணை அனுப்பியும், அவர் ஏன் ஆஜராகவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க யோகியதை இல்லை ஆனால் அவருடைய நினைவிடத்தை திறக்க என்ன யோகியதை இருக்கிறது இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வரவுள்ளது அதில் திமுக வெற்றி பெறும் அதிமுக டெபாசிட்டாவது பெற ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து நாடகமாடுகிறார்கள் என்று பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu