பட்டபகலில் மூதாட்டியிடம் 8. 5 பவுன் செயின்பறிப்பு

காட்பாடியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பட்டபகலில் மூதாட்டியிடம் 8. 5 சவரன் தங்கதாலி சரடு பறிப்பு சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவரின் மனைவி ராணி (60) இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து மின்னல் போல் ராணியின் கழுத்தில் அவர் அணிந்திருந்த தங்கத்தால் ஆன 8.5 சவரன் தாலி சரட்டை பறித்தார் உடனடியாக மூதாட்டி ராணி சுதாரிப்பதற்குள் அவர் கீழே தள்ளிவிட்டு நகையை பறித்துகொண்டு ஓடியுள்ளார் பின்னர் அங்கிருந்து அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார் இதுகுறித்து ராணி அளித்த புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் பட்டப்பகலில் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு நகைகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu