வேலுார் : ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா

வேலுார் : ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா
X

வேலுாரிலுள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேலுாரில் பிரசித்தி பெற்ற ஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு இன்று நடராஜருக்கான ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஸ்ரீநடராஜருக்கு 50-க்கும் மேற்பட்ட பால்,சந்தனம்,தயிர் இளநீர் தேன் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் தீபாராதனைகள் நடைபெற்றது ஸ்ரீநடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்மன் ராஜகோபுரம் முன்னர் தோன்றி ஆருத்ரா கோபுர தரிசனம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பக்தியுடன் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு