வேலூர் மாவட்டத்தில் இன்று 375 பேருக்கு கொரோனா பாதிப்பு, 15 பேர் பலி

வேலூர் மாவட்டத்தில் இன்று 375 பேருக்கு கொரோனா பாதிப்பு, 15 பேர் பலி
X

கொரோனா ( மாதிரி படம்)

வேலூர் மாவட்டத்தில் மேலும் 375 பேருக்கு தொற்று உறுதியானது. வேலூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 200 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 375 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 712 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 768 பேர் குணமடைந்துள்ளனர். 633 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்து 311 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story
ai solutions for small business