எனக்கும் கொரோனா - தடுப்பு ஊசி போட்டதால் தப்பித்தேன் - துரைமுருகன்.

எனக்கும் கொரோனா - தடுப்பு ஊசி போட்டதால் தப்பித்தேன் - துரைமுருகன்.
X

தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் இதுகுறித்து நாளை தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் 4 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா நிவாரண நிதி இன்று முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் கூறியதாவது. இன்று முதல் மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 871 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானாநிதி

84 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

விவசாயிகளின் நலன் கருதி காவிரியில் 92 அடியில் தண்ணீர் இருந்தாலே தண்ணீர் திறக்கலாம்.ஆனால் தென்மேற்கு பருவமழை துவங்கிய பின்னர் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்தால்தான் டெல்டா பாசன விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும் தற்போது 97 அடியாக தண்ணீர் உள்ளது. எனவே தென்மேற்கு பருவமழை, மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு

தண்ணீர் திறப்பது குறித்து நாளை அனைத்து டெல்டா பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் தஞ்சையில் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறினார்.

கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கொரானா தொற்றிலிருந்து மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகிறார்.

மேலும் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் சுறுசுறுப்புடன் விரைந்து பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கு முன்பாக எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது, இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், நான் கொரானா தொற்றில் இருந்து காப்பாற்ற பட்டேன். எனவே வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

#கொரோன #WaterResources #Minister Duraimurugan #Mettur dam #escapedthecorona #duraimurugan #vaccination #Instanews #TNGovernment #stayhome #staysafe #CoronaFund #coronavirus #CoronaSpread #Corona2nd Wave #vaccine #escaped #recoverd

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!