இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு
X
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்.

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு. ஒரு மணி நேரம் போராடி வாகனத்தை பிரித்து பாம்பை பிடித்த தீயணைப்பு துறை.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவர் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேதாஜி மார்கெட்டில் பொருட்களை வாங்க தனது இருசக்கர வாகனத்தில் வந்தார். இருசக்கர வாகனத்தை வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். திரும்பி வந்து பொருட்களை வைக்க வாகன டிக்கியை திறந்த போது அதில் சுமார் ஒரு மீட்டர் நீளத்திற்கு மரம் ஏரி பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர் இது குறித்து வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த 5 பேர் கொண்ட தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி வாகனத்தை பிரித்து பாம்பை பிடித்து வேலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பேருந்து நிலையத்தில் நிறுத்திய இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!