நர்சரி பிரைமரி பள்ளி நலச்சங்கம்-பள்ளிகளை திறக்க கோரிக்கை

நர்சரி பிரைமரி பள்ளி நலச்சங்கம்-பள்ளிகளை திறக்க கோரிக்கை
X
மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டும், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் நர்சரி & பிரைமரி பள்ளிகளை திறக்க வேண்டி நர்சரி பிரைமரி பள்ளி நலச்சங்கத்தினர் கோரிக்கை.

1 முதல் 8-ம் வகுப்பு வரை முதல் கட்டமாகவும், அடுத்த கட்டமாக LKG, UKG வகுப்புக்களை திறக்க கோரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சங்கத்தினர் மனு.

கொரோனா கால ஊரடங்கை கருத்தில் கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனையடுத்து படிப்படியாக அரசு விதிமுறைகளின் படி கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்காததால் மாணவ, மாணவியர்களின் நலன் கருதியும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பொருளாதாரம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் இவற்றை கருத்தில் கொண்டும், முதல்கட்டமாக 1-முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கட்டமாக LKG, UKG வகுப்புகளையும் திறக்க கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்திபனிடம் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil