வேலூரில் காதலர் தினம் வாழ்த்து அட்டை எரிப்பு

வேலூரில் காதலர் தினம் வாழ்த்து அட்டை எரிப்பு
X
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழ்த்து அட்டையை கொளுத்திய இந்து முன்னனியினர்.

பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் காதல் சின்னமான ரோஜாவையும், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம். இந்நிலையில் காதலர் தினத்திற்கும், காதலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னனி அமைப்பினர், தோட்டப்பாளையம் பகுதியில் இதய வடிவில் காதலர் தின எதிப்பு என ஓர் அட்டையை வடிவமைத்து அதை தீயிட்டு கொளுத்தினர். மேலும் காதலர்கள் பறிமாறும் வாழ்த்து அட்டையையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் காதலர் தினமான இன்று வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தளமான வேலூர் கோட்டையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு கோட்டைக்கு வரும் இளம் ஜோடி காதலர்களை திரும்பி அனுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!