பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க ஆய்வு

பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க ஆய்வு
வேலூர் மாநகர் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைய உள்ள பாலத்துக்கு நில எடுப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு.

வேலூர்-காட்பாடி இடையேனா போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சத்துவாச்சாரி பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு.

வேலூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வேலூர்- மாநகர மற்றும் காட்பாடி மக்களின் நீண்ட கோரிக்கையாக இருந்து வந்த சத்துவாச்சாரி பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அரசின் 2 அறிவிப்புக்கு பின்னும் பணிகள் தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் மேம்பால பணிகளை விரைவு படுத்தும் விதமாக நிலம் எடுப்புக்காக அரசு 28.32 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி நிலம் எடுப்பு தொடர்பாக மேம்பால சாலை துவங்கும் பிரம்மபுரம் மற்றும் மேம்பால சாலை முடியும் ராங்காபுரம் தேசிய நெடுச்சாலை 47 வரை என சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரம் வரையிலான நிலம் எடுப்பு பணியிணையும், மேம்பாலம் அமைக்க இருக்கும் வழித்தடத்தையும் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்திபன் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவிகோட்ட பொறியாளர் சுகந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்க்கொண்டனர். இதற்கு அடுத்த கட்டமாக கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களை அழைத்து கருத்துகேட்பு நடத்திய பின்னர் உரிய தொகை வழங்கப்பட்டு, பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story