நீச்சல் பழக சென்ற சிறுவன் உயிரிழப்பு

நீச்சல் பழக சென்ற சிறுவன் உயிரிழப்பு
X

வேலூர் அருகே நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் தொரப்பாடி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி காதர்பாஷா. இவருடைய 12 வயது மகன் ஆதில்பாஷா தொரப்பாடி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், விடுமுறையில் ஆதில்பாஷா ஆடு மேய்த்து வந்துள்ளான். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிசென்ற ஆதில்பாஷா, மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் ஆதில்பாஷாவை தேடி சென்றுள்ளனர்.

அப்போது தொரப்பாடி ஏரிக்கரை ஓரம் ஆடுகள் மேய்ந்த நிலையில், அருகே உள்ள கிணற்றில் சிறுவன் எடுத்து சென்ற 5 லிட்டர் கேன் மிதந்த நிலையிலும், அவன் உடுத்தி இருந்த உடை கரை மீதும் இருந்துள்ளது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சிறுவனை தேடி வந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதாலும் தண்ணீர் அதிகம் இருப்பதாலும் தேடுவதை நிறுத்திவிட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை நாடுவதாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி இரவு முழுவதும் தேடி இன்று அதிகாலை 4 மணிக்கு மாணவன் உடலை மீட்டுள்ளனர். இது குறித்து பாகாயம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவன் அரைகுறையாக நீச்சல் கற்றுகொண்டு வந்ததாகவும் இந்நிலையில், வழக்கம் போல் நேற்று(10 ம் தேதி) ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிசென்ற அதில்பாஷா, தனியாக தனது இடுப்பில் 5 லிட்டர் கேனை கட்டிகொண்டு கிணற்றில் குதித்து நீச்சல் பழகி இருக்கலாம் எனவும் திடீரென இடுப்பில் கட்டியிருந்த கேன் அவிழ்ந்து சிறுவன் நீரில் மூழ்கியிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறினர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!