காணாமல் போனவர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்பு

காணாமல் போனவர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்பு
X

வேலூர் கே.வி.குப்பம் அருகே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் பாழடைந்த கிணற்றில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே மங்கானிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் காணாமல் போனதாக அவருடைய மனைவி பரிமளா கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்த புகார் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.அந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டிருந்த போது,கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சேகர் பற்றியும் இவரிடம் போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு சேகர் கொலை வழக்கு தொடர்பாக தமக்கு தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக கே வி குப்பம் போலீசார் அந்தப் பகுதியை சேர்ந்த செல்வராஜ் ,சேட்டு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக சேகரை கொலை செய்து கே வி குப்பம் அருகே மலைஅடிவாரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கே.வி.குப்பம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயவியல் துறை மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் பாழடைந்த கிணற்றில் சேகரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சேகரின் உடலை முழுவதுமாக எலும்புக்கூடாக கண்டுபிடித்து எடுக்கப்பட்டது . உடனடியாக போலீசார் அவற்றை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக செல்வராஜ் மற்றும் சேட்டு ஆகியோரை கே.வி.குப்பம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!