இல்லத்தரசிகளுக்கு ஊதியம் - சொன்னால் கிண்டலடிக்கிறார்கள் : கமல் ஆதங்கம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில் தமிழகத்தில் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்க்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
குடியாத்தத்தில் அவர் பேசுகையில். பெருந்தலைவர் காமராஜரை வெற்றிபெற வைத்த ஊர் குடியாத்தம், நல்லதும் கெட்டதும் தெரிந்த ஊர் என்பதற்கு அதுவே சான்று, மக்கள் நீதி மயத்திற்கும் இங்கே நல்ல வரவேற்பு இருக்கும், நேர்மைக்கும் வரவேற்பு இருக்கும் என்று நாம் எடுத்துக்கொள்வோம். எங்கு பார்த்தாலும் தமிழகத்தில் திறந்த சாக்கடையாக உள்ளது. முக்கியமாக நான் குடியாத்தத்தில் ஒரு நதியில் பார்த்த காட்சி நெஞ்சை இருக்கமாக்கியது. குடியாத்தம் கௌண்டன்ய மகாநதி குப்பை நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். இதையெல்லாம் மாற்ற வேண்டும். அதற்கான வாய்பை சரித்திரம் உங்களுக்கு கொடுத்துள்ளது, அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஓட்டு உங்கள் உரிமை அதனை சரியான இடத்திற்கு நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் உங்களை சூழ்ந்திருக்கும் நுரைகள் நீங்கும், தாய்மார்கள் அனுபவிக்கும் சோகம், பள்ளி பிள்ளைகள் அனுபவிக்கும் சோகம், குடிகாரர்கள் அதை விடமுடியாமல் தவிக்கும் சோகம் இவற்றை நீக்குவதற்கான வைத்தியம் எங்களுக்கு தெரியும். அதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளது.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என சொன்னதும் கிண்டல் அடித்தார்கள், தற்போது கிண்டல் அடிக்கிறார்கள் அது நிகழ்ந்தே தீரும். அதன் பயனை நமது தாய்மார்கள் அனுபவித்தே தீர்வார்கள். வேலை தேடும் இளைஞர்களாக வைக்காமல் வேலைகொடுக்கும் முதலாளிகளாக மாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் திறனை மேம்படுத்த வேண்டும் இதற்காக குறுகிய கால திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க இருக்கிறோம். அதை தொடங்கியும் விட்டோம். குடியாத்தம் போன்ற ஊர்கள் பெருநகரங்களுக்கு இடையான நவீன கருவிகளை பெற வேண்டும் அதற்கான திட்டமும் எங்களிடம் உண்டு என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu