வேலூர் அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - பணம் பறிமுதல்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறதுஉள்ளாட்சி நிதித்தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகம். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் நிதி செலவின கணக்குகளை தணிக்கை செய்யும் உள்ளாட்சி நிதித்தணிக்கை துறை அலுவலகத்தில், உதவி இயக்குனராக பரமானந்தம்(52) என்பவர் பணியாற்றி வருகிறார்.
ஆங்கில புத்தாண்டை யொட்டி பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர், ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் உள்ளாட்சி நிதிதணிக்கை துறை உதவி இயக்குனர் பரமானந்ததிற்கு புத்தாண்டு பரிசாக பணம் மற்றும் பொருட்களை கொடுக்க இருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை DSP ஹெமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மாலை 5.00 மணி அளவில் உள்ளாட்சி நிதிதணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையில் உதவி இயக்குனர் பரமானந்தத்திடம் இருந்தும் அவரின் அலுவலகத்தில் இருந்தும் கணக்கில் வராத ஒரு லட்சத்தி 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசாக பெறப்பட்ட டைரிகள், சால்வைகள், பழங்களை பறிமுதல் செய்யப் பட்டது. இதனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu