குற்றம் சொல்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள் : வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழக அரசு அறிவித்த அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு திட்டத்தை வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் துவக்கி வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்தி 21 ஆயிரத்து 339 குடும்ப அட்டை தாரர்களுக்கு 2500 ரூபாய் பணமும், பொங்கல் பரிசும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பேட்டியில் கூறியதாவது :
சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்த போது கூட இப்படி தான் கொச்சை படுத்தி பேசினார்கள். 45 ஆண்டுகளாக இன்றுவரை சத்துணவு திட்டம் செயல்படுகிறது. அதேபோல தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு சைக்கில், லேப்டாப் வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் திமுகவினர் கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். அவர்கள் கொச்சை படுத்தாத திட்டம் ஏதாவது உண்டா? அந்த வகையில் தான் தற்போது 2500 கொடுப்பதையும் கொச்சை படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு 1000 ரூபாய் கொடுத்ததற்க்கும் நீதிமன்றம் சென்றார்கள். ஆக குற்றம் சொல்வதும் ஏதாவது ஏளனம் பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என கூறினார். மேலும் இப்பொங்கல் பரிசு வரும் ஜனவரி 13-ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் விடுபட்டவர்கள் பொங்கள் முடிந்த பிறகும் வாங்கிக்கொள்ளளாம் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu