வேலூர் வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை, கணக்கில் வராத பணம் பறிமுதல்

வேலூரில் உள்ள மாநில வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் இணை ஆணையர் அறையில் இருந்து புத்தாண்டுக்கு பரிசாக பெற்ற கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் கோட்டை சுற்று சாலையில் அமைந்துள்ளது மாநில வரிகள் துறை அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது மாநில வரித்துறை இணை ஆணையர் அலுவலகம், இதன் இணை ஆணையராக விமலா(42) என்பவர் பணியாற்றி வருகிறார். கூடுதலாக நுண்ணறிவு பிரிவு மற்றும் பொது நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஒருங்கிணைந்த வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்நிலையில் நேற்று (29 ம் தேதி) வேலூர், திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றுள்ளது.

இதில் சுமார் 50 பேர் வரை பங்கேற்றுள்ளனர். இப்பயிற்ச்சி முடிவில் வரும் 2021 புத்தாண்டையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற இருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மாலை சுமார் 5 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி., ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மாநில வரிதுறை இணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்க்கொண்டனர். அப்போது புத்தாண்டு பரிசாக ரொக்கப்பணம் மற்றும் சால்வை, இனிப்புகள், டைரிகள் பெறப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இணை ஆணையர் விமலாவின் அறையின் பல்வேறு இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கண்டெடுக்கப்பட்டு இது குறித்து இணை ஆணையர் விமலாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பணத்திற்கு உரிய கணக்கு காட்டாததால் அவை லஞ்ச ஒழிப்பு துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுமார் 7 மணி நேரத்திற்க்கு பிறகு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவடைந்தது. மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil