கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றியதாக பாமக முன்னாள் நகர செயலாளர் கைது

மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பா.ம.க பிரமுகர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகர செயலாளர் வெங்கடேஷ். இவர், திருப்பத்தூர் மாவட்டம் கௌதம் பேட்டை பகுதியை சேர்ந்த ஆசிரியரான ஆனந்தி (54) என்பவரிடம், உங்களின் மகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு 5 லட்ச ரூபாய் பணத்தை பெற்று கொண்டு சீட் வாங்கி கொடுக்காமலும், கொடுத்த பணத்தியையும் திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பணம் குறித்து கேட்டபோது மிரட்டியதால் ஆனந்தி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதேபோல் உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குப்தா என்பவரது மகனை வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சீட் பெற தனது நண்பரான சக்திவேலிடம் உதவி கேட்டுள்ளார். அவர், தனக்கு தெரிந்த வெங்கடேஷனிடம் கேட்டுள்ளார். அதற்காக 5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இவர்களைப் போன்றே சம்பத் குமார் என்பவர் தனது மகனுக்கு கல்லூரியில் சீட் பெற 5 லட்சம் கொடுத்துள்ளார். இவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பண மோசடி குறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தொடர் புகார் வரவே, குற்றப்பிரிவு காவல் துறையினர் பா.ம.க பிரமுகர் வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும்,வெங்கடேசன் பலரிடம் இதேபோன்று மோசடி செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே வெங்கடேசனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!