வசந்தகுமார் நினைவு மணிமண்டபம்:காங். மாநில தலைவர் திறந்து வைத்தார்
வசந்தகுமார் நினைவு மணிமண்டபம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் எழுப்பப்பட்ட வசந்தகுமார் நினைவு மணிமண்டபத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று திறந்து வைத்தார்.
சைக்கிளில் பயணம் தொடங்கி வசந்த் அன் கோ என்ற பெயரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தனது ஸ்தாபணத்தை நிறுவி தனி சாம்ராஜ்யம் அமைத்தவர் மறைந்த குமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹச். வசந்த குமார்.
படிப்படியாக முன்னேறினாலும் முன்னேற்ற பாதையில் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து குமரிமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ஹச். வசந்தகுமார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய ஹச்.வசந்த குமார் சட்டமன்ற உறுப்பினராகவும் குமரி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றினார்.
இதனிடையே உலக மக்களை அச்சுறுத்திய கொரோனா தாக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி விண்ணுலகை அடைந்த வசந்தகுமாருக்கு கன்னியாகுமரி மக்கள் ஒன்றிணைந்து முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை சமர்ப்பித்தனர்.
அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் எழுப்பப்பட்ட வசந்த குமார் நினைவு மணிமண்டபத்தையும் வசந்தகுமார் உருவ சிலையையும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது கே.எஸ். அழகிரி பேசியதாவது:
தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சிகரத்தைத் தொட்டவர் வசந்தகுமார், எனக்கும் வசந்தகுமாருக்கும் 40 ஆண்டுகால அறிமுகம் உண்டு. வசந்தகுமாரிடம் எனக்குப் பிடித்தமான ஒன்று, ஒரு தோல்வி ஏற்படும் போதெல்லாம் அதை மிகவும் இயல்பாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். தோல் வியால் அவர் விரக்தி அடைந்ததில்லை. அதுதான் அவருடைய வாழ்க்கையின் வெற்றி ரகசியம். தன்னுடைய வாழ்க்கையில் தொழி லையும், அரசியலையும் ஒன்றாக நேசித்தவர். ரசிப்புத்தன்மை இருந்ததால் அரசியலிலும் வெற்றி பெற்றவர்.
கடந்த 50 ஆண்டு காலமாக காங்., தமிழகத்தில் எதிர்க் கட்சியாகதான் இருந் திருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு தனித் தன்மையோடு இருந் தவர் வசந்தகுமார். தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சிகரத்தைத் தொட்டவர் அவர். அவருடைய மறைவால் அவரு டைய குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை விட கட்சியினருக்கு ஏற்பட்ட இழப்பு அதிகம் என்று பேசினார்.
கன்னியா குமரி எம்.பி., விஜய்வசந்த் நன்றி கூறினார். நான்குநேரி எம். எல்.ஏ., ரூபிமனோகரன், தமிழ்நாடு காங்., கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், பாமக., மாநில தலைவர்ஜி.கே.மணி, காங்.,சட்டசபை தலைவர் செல்வபெருந்தகை காணொலி காட்சி மூலம் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செய லாளர் ஆஸ்கர் பிரடி, முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., ராமசுப்பு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்., மாநில செயலாளர் சீனிவாசன், வசந் தகுமாரின் மனைவி செல்வி, மகன் தினேஷ் குமார், மகள் தங்கமலர் மற்றும் காங்., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu