வைபவ் - வாணி போஜன் நடிக்கும் மலேஷியா டு அம்னீஷியா...

மலேஷியா டு அம்னீஷியா

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன் நடிக்கும் 'மலேஷியா டு அம்னீஷியா' 'லாக்கப்' வெற்றிக்கு பிறகு வைபவ் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'மலேஷியா டு அம்னீஷியா'. இப்படம் மே 28 அன்று வெளியாகிறது.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள 'மலேஷியா டு அம்னீஷியா' படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன்இசை - பிரேம்ஜிகலை - கதிர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!