பிப்ரவரி 1ம் தேதி முதல் புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் பரவலை கட்டுப்படுத்த பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தென்னக ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயிலில் பயணிக்கும் நபர்கள் மாதாந்திர பயணச்சீட்டு, ஒரு முறை பெறும் பயணச்சீட்டு ஆகியவை பெறும்போது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை காட்டி பயணச்சீட்டு பெற வேண்டும் என உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில் பரவல் குறைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியதை தொடர்ந்து தென்னக ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை எனவும், சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட மத்திய , மாநில அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu