நாளை நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் நிலைய மருத்துவமனையை இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு சுமார் 300 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை வளாகத்தை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 65 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த உள்ளனர். இவர்களுக்காக தற்போது சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம், இந்த வாரம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி நடைபெறும் என்று கூறினார்,
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் இது ரகசியம் காக்கப்படும் எனவும் இதனால் புற்று நோயை ஒழிக்க பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் , சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu