தபால்துறை : பின்கோடு எழுதுவதால் உபயோகம் என்ன ?
இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். . இந்திய அஞ்சல்துறை சுமார் 1, 54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்.
இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.
கடிதத்தில் முகவரியின் கீழ் அஞ்சல் குறியீட்டு எண் எழுத ஆறு கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும், நம்மில் பலருக்கு அஞ்சல் குறியீட்டு எண் எதற்காக பயன்படுத்தப்படுகிறது, அது ஏன் அவசியமாகிறது என தெரியாது.
அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும்.
முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும்.
இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும்
மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும்.
கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.
இவை அனைத்தும் சரியாக இருப்பின் அக்கடிதம் விரைவாக பயனாளி அடையும் எனவே அஞ்சலக குறியீட்டு எண்ணை கவனமாக பதிவிட வேண்டும்.
இது அனுப்புனர், ஊழியர்கள் , பெறுநர் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu