வேங்கைவயல் பிரச்னையில் தேசிய பட்டியலின ஆணையம் தலையிட வலியுறுத்தல்
தேசிய பட்டியல் இன ஆணைய துணை தலைவர் அருண் ஹோல்டரிடம் மனு வழங்கிய இளமுருகு முத்து
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராம குடிநீர்த்தொட்டியில் மனிக்கழிவு கலக்கப்பட்ட பிரச்னையில் தேசிய பட்டியலின ஆணையம் தலையிட வேண்டுமென அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 26 12 2021 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் தலித் குடியிருப்பில் உள்ள குடிநீர்த் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் இந்த நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க அம்பேத்காரிய இயக்கங்கள் 7.1.2023 அன்று சென்னையில் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அதன் பிறகு 12 .1. 2021 அன்று அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து மற்றும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு தமிழரசன் ஆகியோர் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து விசாரணையை துரிதபடுத்த கோரிக்கை வைத்தனர் . இதனை அடுத்து ஒரு சில தினங்களில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது ஆனால் 40 நாட்களை கடந்தும் இந்த விசாரணையில் இதுவரை எந்த குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதில் தமிழக காவல்துறையும் தமிழக அரசும் மெத்தனமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்னையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலையிட வேண்டும் என்ற எண்ணத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து, தேசிய பட்டியல் இன ஆணைய துணை தலைவர் அருண் ஹோல்டர் அவர்களை டெல்லியில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராம குடிநீர்தொட்டியில் மனித்தக்கழிவு பிரச்னையில் விசாரணையை துரித படுத்த கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் . புகார் மனுவை ஏற்றுக்கொண்ட அருண் ஹல்டர் பாதிக்கப்பட்ட மக்களை மார்ச் நான்காம் தேதி வேங்கைவயல் கிராமத்திற்கே வந்து மக்களை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார் என்று இளமுருகு முத்து தில்லியில் தெரிவித்துள்ளார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu