உள்ளாட்சித் தேர்தல் -2022 அமைதியாக நடைபெற்றது: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்

உள்ளாட்சித் தேர்தல் -2022 அமைதியாக நடைபெற்றது: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்
X
வாக்குப்பதிவில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை - தமிழ்நாடு காவல்துறை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (19.02.2022) அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அமைதியாக நடைபெற்றுள்ளது.

ஒரு சில இடங்களில் வாக்கு வாதம், சாலை மறியல் உள்ளிட்ட சிறிய பிரச்சனைகள் நடைபெற்ற போது காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டினர்.

பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாலும், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதாலும் வன்முறைச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. நடந்த சில நிகழ்வுகள் குறித்து தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடம் இருந்து சமூக வலைதளங்களின் மூலமாகவும் காவல் தொலைபேசி எண்கள் மூலமாகவும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டி உள்ளனர். காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த கொள்கிறது. பொதுமக்களுக்கு காவல்துறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மின்ணணு வாக்குப் பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்று ஒப்படைக்கும் வரை காவல் கண்காணிப்பு மற்றும் காவல் ரோந்துப்பணியும், பின் வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்தனர்.

Tags

Next Story