சாதித்து காட்டிய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்

சாதித்து காட்டிய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்
X

பைல் படம்.

UPSC Meaning in Tamil-யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

UPSC Meaning in Tamil-ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் 933 பேர் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்து சாதனை படைத்துள்ளனர். இஷிதா கிஷோர் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடத்தையும், உமா ஹராதி என்ற பெண் மூன்றாமிடத்தையும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 39 பேர் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 3 பேர் தமிழ்நாட்டில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்களின் வாரிசுகளாவர்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெகந்நாதனின் மகள் சத்ரியா கவின் 169-வதுஇடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை ஆணையராக உள்ள அதுல் ஆனந்த்தின் மகள் ஈஷானி 291 ஆவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன், 361வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!