இந்திய மீனவர்கள் 55 பேரை விடுவிக்கக் கோரி மத்திய இணையமைச்சர் எல். முருகன் கடிதம்

இந்திய மீனவர்கள் 55 பேரை விடுவிக்கக் கோரி மத்திய இணையமைச்சர் எல். முருகன் கடிதம்
X

மத்திய இணையமைச்சர் எல். முருகன்

மத்திய இணையமைச்சர் எல். முருகன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55 இந்திய மீனவர்களை மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். எனவே, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் படகுகளையும் மீட்டுத்தரும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!