உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தடையில்லாத மின்சாரம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தடையில்லாத மின்சாரம்
X

பைல் படம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தடையில்லாத மின்சாரம் வழங்கி மின்வாரியம் அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தடையில்லாத மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இந்த இரு அணிகளும் இன்று களத்தில் இறங்கியுள்ளன.

தோல்வியே காணாமல் 10 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிய இந்திய அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த தொடரில், 8 ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் பலப்பரிட்சைக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. ரசிகர்கள் எவ்வித இடையூறும் இன்றி போட்டியை கண்டுரசிக்கும் வகையில், இன்று தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கி விளையாடி வருகிறது.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!