தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி தேசிய அளவிலும் மாநில அரசுகள் சார்பாகவும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அவரை கௌரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி இருவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
மாநில அரசு சார்பில் இந்த ஆண்டு 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கான இறுதிப்பட்டியல் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu