சென்னை சோழவரம் அருகே ரவுடிகள் சுட்டுக்கொலை

சென்னை சோழவரம் அருகே ரவுடிகள் சுட்டுக்கொலை
X
சோழாவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சோழாவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுசென்னை அழைத்து வந்த நிலையில் 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த சோழவரம் அருகே போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சோழவரம் அருகே புதூர் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணனை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். கொலை வழக்கில் முத்து சரவணனை பிடிக்க காவல் துறையினர் முயற்சித்துள்ளனர். அப்போது காவலர்களை அவர் தாக்கியதாக தகவல். தொடர்ந்து தற்காப்பு ரீதியாக போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் முத்து சரவணன். இவர் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

நேற்று இரவு போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற ரவுடி தணிகாவை மாமண்டூர் அருகே சுட்டுப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!