டி.டி.வி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு-மருத்துவமனையில் அனுமதி

டி.டி.வி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு-மருத்துவமனையில் அனுமதி
X

டி.டி.வி. தினகரன்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர் டி.டி.வி. தினகரன். இவருக்கு நேற்று இரவு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு ஒவ்வாமை காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் நலமாக இருப்பதாகவும், தன்னை யாரும் பார்க்க வரவேண்டாம் என்றும் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!