வந்தாச்சு அடுத்த அடி: லாரி வாடகை 20 சதவீதம் உயர்கிறது

வந்தாச்சு அடுத்த அடி: லாரி வாடகை 20 சதவீதம் உயர்கிறது
X

மாதிரி படம் 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப். 25 முதல் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர் சங்கம் முடிவு

மதுரை லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் சாத்தையா கூறுகையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் தொழிற்சாலைகள் சரியாக இயங்காததால் சரக்கு லாரி தொழில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசலுடன் டோல்கேட் கட்டணம் 25 சதவீதம், இன்சூரன்ஸ் ரூ.5000 உயர்ந்துள்ளது. தற்போது மதுரை - சென்னை சரக்கு லாரி வாடகை ஒரு டன்னுக்கு ரூ.1200 வசூலிக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப். 25 முதல் லாரி வாடகை 20 சதவீதம் உயர்த்தப்படும். மதுரையில் உள்ள 300 பார்சல் சர்வீஸ் நிறுவனங்களும் ஏப். 25 முதல் 20 சதவீதமாக உயர்த்தவுள்ளன என்றார்.

Tags

Next Story
ரூ.5 கோடி செலவில் கட்டிய சேமிப்புக் கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் வீண்!