கடலூர் அருகே வேன் மீது லாரி மோதல்: மூவர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான வேன்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். அதில் சிதம்பரம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், மாநாடு முடிந்து வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் வீடு திரும்பியபோது, சேலம் – விருத்தாச்சலம் மாநில நெடுஞ்சாலையில் என்.நாரையூர் கைகாட்டி அருகே வேனில் வந்துகொண்டிருந்தபோது எதிரே லோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உத்திரகுமார், யுவராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.பலத்த காயமடைந்த அன்புச்செல்வன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு வேப்பூர் மற்றும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu